ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள் / முஷாரப்புக்கு இருவாரம் நீதிமன்றக் காவல்


004ஜிம்பாப்வே: ராணுவ வீரரின் கண்ணைக் கட்டி கடத்திச் சென்று 4 நாட்களாக கற்பழித்த பெண்கள்-
ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 19ம்தேதி நள்ளிரவு மாணிக்காலாந்து மாகாணத்தில் உள்ள முடாரே நகரில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி ‘லிப்ட்’ கேட்டார். காரினுள் இருந்த ஒரு ஆணும், 2 பெண்களும் அவரை ஏற்றிக்கொண்டனர்.
சற்றுதூரம் சென்றதும் கார் வேறு வழியாக செல்வதைக் கண்ட ராணுவ வீரர், தன்னை இறக்கிவிடும் படி கூறியபோது, காரை ஓட்டிய நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார்.
பெண்களில் ஒருத்தி அவரது கண்ணை துணியால் கட்டினாள். அடையாளம் தெரியாத இடத்தில் தனிமையான ஒரு வீட்டிற்கு ராணுவ வீரரை அவர்கள் கடத்திச் சென்றனர். அங்கு அவரது ஆடைகளை கழற்றி, நிர்வாணப்படுத்தி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்ட 2 பெண்களும் பலவந்தமாக அவருடன் உடலுறவில் ஈடுபட்டனர்.
2 பெண்களும் அவருடன் 4 நாட்கள் மாறி, மாறி பலமுறை கட்டாய உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கடந்த 23ம் தேதி மீண்டும் கண்ணைக் கட்டி காரில் அழைத்து வந்து முடாரே நகர் அருகில் உள்ள டங்கமுவாரா மலைப் பகுதியில் இறக்கி விட்டனர்.
மலையோரம் இருந்த பெரிய கல்லை எடுத்து அவரது இடது காலை காயப்படுத்தி விட்டு அவர்கள் காரில் தப்பிச் சென்றனர்.
ராணுவ வீரர் முடாரே நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்களையும், அவர்களுடன் இருந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
முஷாரப்புக்கு இருவாரம் நீதிமன்றக் காவல்-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், பெனசிர் புட்டோ படுகொலை வழக்கில், மாஜி அதிபர் முஷாரப்பை, இரண்டு வாரம், நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, 2008ல், தேர்தல் பிரசாரத்தின் போது, தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அப்போது அதிபராக இருந்த பெர்வேஸ் முஷாரப், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், கைதாவதை தவிர்க்க, முஷாரப், இடைக்கால ஜாமின் பெற்றிருந்தார். இம்மாதம், 11ம்தேதி, பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெறுகிறது. லண்டன் மற்றும் துபாயில், நான்காண்டுகளாக தங்கியிருந்த, முஷாரப், தேர்தலில் போட்டியிடுவதற்காக, நாடு திரும்பினார்.
ஆனால், அவரது, நான்கு வேட்பு மனுக்களையும், தேர்தல் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து விட்டது. முஷாரப் அதிபராக இருந்த போது, 2007ல், அவசர சட்டத்தின் மூலம், 60 நீதிபதிகளை, சிறையில் அடைத்தார். அரசியலமைப்பை மீறியதாக, அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அவரது ஜாமினை நீட்டிக்க இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, இஸ்லாமாபாத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பெனசிர் புட்டோ கொலை வழக்கு, பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.
இந்த வழக்கில், முஷாரப்பை இரண்டு வாரம், நீதிமன்ற காவலில் வைக்கும்படி, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுத் தேர்தல், 11ம்தேதி முடிந்த பிறகு, 14ம்தேதி, இந்த வழக்கும், மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger