2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு பட்டியலில் இருந்து இரண்டுக்கு மேற்பட்ட வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
72,319 பதிவுகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலிருந்து 11,359 பதிவுகளும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 9,023 பதிவுகளும் வன்னி மாவட்டத்திலிருந்து 5410 பதிவுகளும் யாழ் மாவட்டத்திலிருந்து 4067 பதிவுகளும் கண்டி மாவட்டத்திலிருந்து 4040 பதிவுகளும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 3951 பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்காளர் இடாப்பு பட்டியலில் இரண்டுக்கு மேற்பட்ட பதிவுகளை மேற்கொண்டிருந்தமையினால் 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து 176,534 பதிவுகள் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடித்தக்கதாகும்.

Post a Comment