வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பாதிப்புகள் ஏற்படும் -தேரர் அதிரடி / பௌத்த விஹாரைக்கு நிவாரணம் வேண்டும் -ராவணா அமைப்பு



pikku.pothupAlasenaவட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பாதிப்புகள் ஏற்படும் -தேரர் அதிரடி
காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், பிரபாகரன் மேற்கொண்ட பாதிப்புகளுக்கு மேலான பாதிப்புகள் ஏற்படும் எனவும் இதனை மத்திய அரசாங்கத்தினால் கூட தடுக்க முடியாது போகும் என இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் பலவந்தமாக ஏற்படுத்தப்பட்டு, மக்களின் பணத்தை அழிக்கும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை வடக்கில் மாத்திரமல்ல, எந்த மாகாணத்திலும் நடத்தக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
போருக்கு முன்னர், வடக்கில் வாழ்ந்த சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்றாது தேர்தலை நடத்துவது சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்பதால் அதற்கு எதிராக தேசப்பற்றாளர்களை அணித்திரட்ட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு, மக்களின் பணத்தில் வாழும், அமைச்சர்கள் டியூ. குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தேசத்துரோகிகளாக வடக்கில் தேர்தலை நடத்தி, அதிகாரங்களை வழங்க வேண்டும் என தெரிவித்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடத்தப்படுவதற்கு முன்னர், வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அரசாங்கம் உறுதி வழங்கியதா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற்றுக் கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக 05 ஆயிரம் பேரை அழைத்துச் சென்று அந்த தீவில் குடியேற போவதாகவும் தேரர் கூறியுள்ளார்.
பௌத்த விஹாரைக்கு நிவாரணம் வேண்டும் -ராவணா அமைப்பு- 
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாவிட்டாலும் பௌத்த விகாரைகளின் மின் கட்டன பட்டியலுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியது அவசியம் என ராவணா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger