14 வயது தங்கையை கர்ப்பமாக்கிய 17 வயது அண்ணன்! / 2000 வருட பழைமையான பாலைவன ஏரி (PHOTOS)


710oasis14 வயது தங்கையை கர்ப்பமாக்கிய 17 வயது அண்ணன்!
தனது 14 வயது தங்கையுடன் உடலுறவு கொண்டு அவளை கர்ப்பமாக்கிய 17 வயது அண்ணன் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளான்.
குறித்த சிறுமிக்கு கடந்த மூன்று மாதங்களாக மாதவிடாய் வாராமையால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளாள்.
அவளை பரிசோதித்த வைத்தியர்கள், அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பில் பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் போது கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தனது அண்ணன், தன்னுடன் உறவுகொண்டதை சிறுமி ஒத்துக்கொண்டாள்.
இதனை அடுத்து, குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
2000 வருட பழைமையான பாலைவன ஏரி-
சீனாவின் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள பாலைவனத்தில் டுங்ஹுவாங் எனும் நகருக்கு அண்மையில் இந்த நீரூற்று உள்ளது. யுயேயாங்குவான் (பிறை ஏரி) என அழைக்கப்படும் இந்த நீரூற்று 2000 வருடகால பழைமையானதாகும்.
அப்பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி மிக அரிதாகவே பெய்யும் நிலையில் இந்த நீரூற்றின் மூலம் தூய்மையான நீர் கிடைத்து வந்தது.
அந்நீரூற்றின் மூலம் உருவான ஏரி 218 மீற்றர் நீளமும் 54 மீற்றர் அகலமும் கொண்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரி பாலைவன மணலினால் முற்றாக மூடப்படும் அபாயம் காணப்பட்டது. 1960களில் 5 மீற்றர் ஆழமானதாக இருந்த இந்த ஏரியில் 1990களில் ஒரு மீற்றர் அளவுக்கே நீர் காணப்பட்டது.
இதனால் ஏரியில் நீரை நிரப்பும் நடவடிக்கைகளை சீன அரசாங்கம் மேற்கொண்டது. இதனால் அந்த ஏரியும் அதைச்சூழவுள்ள நகரமும் புத்துயிர் பெற்றுள்ளன. தற்போது அங்கு பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் சென்றுருகின்றமை குறிப்பிடத்தக்கது.
710oasis
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger