துபாயில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியரை நாடு கடத்த உத்தரவு / பாலஸ்தீனத்தில் 65-ம் ஆண்டு நாக்பா நினைவு தினம் அனுசரிப்பு


rape.Womenதுபாயில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியரை நாடு கடத்த உத்தரவு-
ஐக்கிய அரபு நாட்டில் உள்ள துபாயில் 37 வயதான இந்தியர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம், ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் கூறியிருப்பதாவது:- மது அருந்திய அவர் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று அங்கிருந்த ஒரு வீட்டுக்கதவை தட்டியிருக்கிறார்.
கதவை திறந்தவுடன், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த அவர், அந்த வீட்டின் வேலைக்கார பெண்ணை கட்டித்தழுவி தகாத முறையில் நடந்து இருக்கிறார். இவைகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனவே அவர் 6 மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும். மேலும் தண்டனைக்கு பிறகு அவர் நாடு கடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் 65-ம் ஆண்டு நாக்பா நினைவு தினம் அனுசரிப்பு-
1948-ம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட போது அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன அரேபியர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். உயிருக்கு பயந்து அனைவரும் வெளியே ஓடினார்கள். அரேபியர்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான இந்த நிலையை நினைவு படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ”நாக்பா” நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி 65-ம் ஆண்டு நினைவு தினம் இன்று பாலஸ்தீனத்தில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஜெருசலம் நகரில் உள்ள மனரா சதுக்கத்தில் ஒன்றுகூடிய மக்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர்.
மேலும் நாட்டின் ரமல்லா, நபுலஸ், துல்காரெம், கால்கில்யா, பெத்லேகம் மற்றும் ஜெரிச்சோ நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 65 வினாடிகள் சைரன் ஒலி எழுப்பப்பட்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பேசிய தலைவர்கள், “இஸ்ரேல் வசமுள்ள அரேபியர் நிலங்களை கையகப்படுத்த நமக்கு உரிமை இருக்கிறது. மேலும் இஸ்ரேல் சிறைகளில் வாடும் அரேபியர்களை நல்லெண்ணத்துடன் விடுதலை செய்ய முன்வரவேண்டும்” என்று வலியுறுத்தினர்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger