பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கொடுங்கையூர், காமராஜர் சாலையை சேர்ந்தவர் தாரா, 34. இவரது கணவர் சங்கரவர்மன், 38. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
தாரா, தமிழக காங்கிரசிலும், புதுச்சேரி மாநில காங்கிரசிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார். சங்கரவர்மனும் தமிழக காங்கிரசில் நிர்வாக பொறுப்பாளராக உள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக சங்கரவர்மன், தனது மூத்த மகளிடம் தகாத முறையில் நடந்து வந்தார். தந்தை என்பதால் அவரும் பொறுத்து கொண்டார்.
ஆனால் நாளாக நாளாக தந்தையின் தொல்லை எல்லை மீறியது. கடந்த நான்கு நாட்களுக்கு முன், தாரா வெளியூர் சென்ற நிலையில், சங்கரவர்மன், மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
தந்தையின் தொடர் அத்துமீறல்களால் அதிர்ந்து போன மகள், தாயிடம் நடந்ததை, அழுது கொண்டே தெரிவித்தார். கணவரின் நடவடிக்கையை கேட்டு அதிர்ந்த தாரா, பொலிஸ் கமிஷனரகத்துக்கு முறைப்பாட்டு மனு அனுப்பினார்.
முறைப்பாட்டு மனு புளியந்தோப்பு துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில் சங்கரவர்மனை எம்.கே.பி.நகர் பொலிசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது உறுதியானதுடன், சங்கரவர்மன் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சங்கரவர்மன் மீது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று மாலை கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி சங்கரவர்மன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்கு மனைவிகளுடன் வாழ முடியாத ஆசாமி தாயுடன் தற்கொலை-
நான்கு மனைவிகளுடன் நிம்மதியாக வாழ முடியாமல், கடன் பிரச்சினையால் விரக்தியடைந்த நபர் ஒருவர் தாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், காலிமனையில் உள்ள கிரானைட் ஸ்டோன் கிரேன் கம்பியில், ஒரு ஆணும், மூதாட்டியும் நேற்று அதிகாலை, தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கினர்.
நான்கு மனைவிகளுடன் நிம்மதியாக வாழ முடியாமல், கடன் பிரச்சினையால் விரக்தியடைந்த நபர் ஒருவர் தாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், காலிமனையில் உள்ள கிரானைட் ஸ்டோன் கிரேன் கம்பியில், ஒரு ஆணும், மூதாட்டியும் நேற்று அதிகாலை, தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கினர்.
அப்பகுதி மக்கள், பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிசார் விசாரணையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த, புஞ்சம்மா, 65, அவரது மகன் சின்னா, 42, என்பது தெரிந்தது.
திருப்பதியில், ஆட்டோ டிரைவராக பணிபுரிந்தார் சின்னா. மூன்று பெண்களை திருமணம் செய்த இவர். அவர்களுடன் சண்டையிட்டு பிரிந்து வாழ்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன், ஓசூர் பஸ்தியில், ராயக்கோட்டையை சேர்ந்த பத்மா என்பவரை காதலித்து, நான்காவது திருமணம் செய்து கொண்டார்.
பத்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து சின்னா, தாய் புஞ்சம்மாவுடன் மீண்டும் திருப்பதி சென்றார்.
அங்கு, சின்னாவுக்கு கடன் சுமை அதிகரிக்கவே, ஆட்டோவை விற்று, சில நாட்களுக்கு முன், தாயுடன் ஓசூர் பஸ்தி வந்தார். பத்மாவிடம் மீண்டும் அடைக்கலம் கேட்டதற்கு, இருவரையும் வீட்டில் சேர்க்க அவர் மறுத்தார்.
வசிக்க இடம் இல்லாமலும், சாப்பிட பணம் இல்லாமலும், இரு நாட்களாக பரிதவித்த இருவரும், நேற்று முன்தினம் இரவு, ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி சென்றனர். அங்கு, காலி மனையில் நின்ற கிரானைட் ஸ்டோன் கிரேனில், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சின்னாவின் சட்டை பையில் இருந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: மனைவிகளுடன், நிம்மதியாக வாழ முடியவில்லை. கடன்காரர்கள், கடனை கேட்டு துரத்துகின்றனர். உயிர் வாழவும் யாரும் அடைக்கலம் கொடுக்கவில்லை; பெற்ற தாயை காப்பாற்ற முடியவில்லை; வாழவே பிடிக்கவில்லை.
அதனால், இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Post a Comment