காதலனுடன் மனைவியாகிய மாணவி, பழைய காதலனான ஒருபிள்ளையின் தந்தையுடன் ஓட்டம்-
காதலனுடன் பதிவு திருமணம் செய்துக் கொண்ட ஒன்றை மணி நேரத்திற்குள் மணப்பெண்( காதலி) சாட்சியாளருடன் ஓடிப்போன சம்பவமொன்று கம்பளை மாவத்துற பகுதியில் இடம்பெற்றுள்ளது. கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது விசேட சித்திகளை (ஏ) பெற்ற மாணவியே இவ்வாறு ஓடி விட்டார்.
காதலனுடன் பதிவு திருமணம் செய்துக் கொண்ட ஒன்றை மணி நேரத்திற்குள் மணப்பெண்( காதலி) சாட்சியாளருடன் ஓடிப்போன சம்பவமொன்று கம்பளை மாவத்துற பகுதியில் இடம்பெற்றுள்ளது. கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது விசேட சித்திகளை (ஏ) பெற்ற மாணவியே இவ்வாறு ஓடி விட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கண்டியிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் பயின்று வந்த இந்த மாணவி கண்டியிலுள்ள மற்றுமொரு பிரபல பாடசாலையில் உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் இரவொன்றை தனியாக கழிக்கவிரும்பினர் இந்நிலையில் காதலியின் நண்பி ஒருவரின் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர். வீட்டிலிருந்தவர்கள் இவர்கள் இருவரையும் தனியாக தங்க வைப்பதற்கு அனுமதிக்க மறுத்துள்ளதுடன் அதன் தார்ப்பரியங்களை விளக்கி கூறியுறியுள்ளனர்.
அத்துடன், இருவருக்கும் பதிவு திருமணம் செய்து வைப்பதற்காக உலப்பனையிலுள்ள திருமண பதிவாளர் அலுவலகத்திற்கு பிற்பகல் 4.30 மணியளவில் அழைத்து சென்றனர்.
பதிவு திருமணம் முடித்துக் கொண்ட இருவரும் நண்பியின் வீட்டுக்கு மாலை 5.30 மணியளவில் வருகை தந்தனர்.
சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்த மணக்கோலத்திலிருந்த பெண் பதிவு திருமணத்திற்கு சாட்சி கையெழுத்திட்டவருடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். தனது முன்னாள் காதலனான ஒருபிள்ளையின் தந்தையுடனேயே குறித்த பெண் ஓடிவிட்டார்.
கைகளை கோர்த்தவாறு இருவரும் ஓடுவதை கண்ட கிராமவாசிகள் அவர்களை பிடிப்பதற்காக துரத்திய போதும் கிராமத்தவர்களால் அவ்விருவரையும் பிடிக்கவில்லை. அவ்விருவரும் அவ்வழியாக வந்த பஸ்ஸில் ஏறி ஓடிவிட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் சம்பத்தப்பட்ட சகலரும் கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.
காதலுடன் பதிவு திருமணமாகி விட்ட போதும் தன்னால் பழைய காதலனை மறக்க முடியவில்லை என்பதனால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரோடு ஓடிபோக தீர்மானித்ததாக அந்த மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சகலரையும் கடுமையாக எச்சரித்த பொலிஸார் இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பம்பரகல தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு-
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலவாக்கலை லிந்துலை பம்பரகல தோட்டத் தொழிலாளர்கள் 1500 பேர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலவாக்கலை லிந்துலை பம்பரகல தோட்டத் தொழிலாளர்கள் 1500 பேர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பம்பரகல தோட்டத்தின் மத்திய பிரிவு, குட்டிமலை, குயின்வுட், டெல், அப்பர் கிரன்லி, ராணிவத்தை ஆகிய தோட்டப் பிரிவுகளின் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகத்தினால் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமைக்கு எதிப்புத் தெரிவித்தே இந்தப்போராட்டம் நடத்தப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் பம்பரகல தோட்ட நிருவாகத்துடன் கேட்ட போது தொழிலாளர்கள் இன்று பணிக்கு வரவில்லை என்பதை அந்த நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது.
Post a Comment