அமெரிக்காவில் 22 பேர் கொண்ட ஊரின் 4 வயது மேயர்-
அமெரிக்காவைச் சேர்ந்த 4 வயதான சிறுவன் ஒருவர் டொஸர்ட் எனும் ஊரின் மேயராக தேர்வு செய்யப்பட்ட விநோத சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 4 வயதான சிறுவன் ஒருவர் டொஸர்ட் எனும் ஊரின் மேயராக தேர்வு செய்யப்பட்ட விநோத சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மின்னசட்டோ என்ற அமெரிக்க மாநிலத்திலுள்ள டொஸர்ட் எனும் ஊரில் மொத்தமாக 22 பேர் மட்டுமே வாழ்கின்றனர். இவ்வூரிலேயே 4 வயதான ரொபட் டப்ஸ் என்ற சிறுவன் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி ஊரில் நடைபெறும் டேஸ்ட் ஒப் டொஸர்ட் எனும் திருவிழா நடைபெறும. இதன்போது குலுக்கல் முறையில் மேயர் தெரிவுசெய்யப்படுவார். இவ்வாறே 4 வயதான ரொபட்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த குலுக்கலில் பங்குபற்ற ஒரு அமெரிக்க டொலர் மட்டுமே செலுத்த வேண்டுமாம். இதில் ரொபட்டும் பணம் செலுத்தி பங்குபற்றி மேயராகவும் மாறியுள்ளார்.
முன் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத இச்சிறுவன் மிகவும் திறமைசாலை என அவ்வூர் மக்கள் போற்றுக்கின்றனர். அவ்வூரின் குறைகளை அறிந்து கொள்ள தடியொன்றுடன் ஊரைச் சுற்றி வரும் மேயர். மக்களின் குறைகளையும் கேட்டுக் கொள்கிறார்.
மேலும் மக்களுக்கு மீன் எவ்வாறு பிடிப்பது என்பது குறித்தும் மக்களுக்கு யோசனை கூறுகிறார். இதேவேளை தனக்கு சோபியா எனும் காதலி இருப்பதை எதுவித நாணமுமின்றி ஒப்புக் கொள்கிறார் 4 வயது மேயர்.
5 ஜி தொழிற்நுட்பத்தினை பரீட்சித்த சம்சுங்-
5 ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தினை பரீட்சித்துப் பார்த்த்தில் ஒரே செக்கனின் முழுத் திரைப்படமொன்றினை தரவிறக்கும் அதிவேகத் திறமை கொண்டதென கண்டறிந்ததாக இன்று சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தினை பரீட்சித்துப் பார்த்த்தில் ஒரே செக்கனின் முழுத் திரைப்படமொன்றினை தரவிறக்கும் அதிவேகத் திறமை கொண்டதென கண்டறிந்ததாக இன்று சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த 5 ஜி தொழில்நுட்பமானது பரீட்சித்துப் பார்கையில் இதன் வேகம் செக்கனுக்கு ஜிகா பைட் வேகம் கொண்டது என ஆதாரபூர்வமாக அறிய முடிந்ததாக சம்சுங் நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பில் அந்நிறுவனம் மேலும் கூறுகையில், இப்புதிய 5ஆம் தலைமுறை தொழில்நுட்பமான 5 ஜி இப்போது வணிக ரீதியான சந்தையில் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்த முடியாது. சாதாரணமாக இந்த 5 ஜி தொழில்நுட்பத்தின் இணைய வேகமானது 4 ஜி போன்று பல நூறு மடங்கு அதிகமானது.
எனவே வாடிக்கையாளர்களுக்கு 3டீ கேம்ஸ், உயர் ரக துல்லிய விடீயோக்கள் உள்ளிட்ட பாரிய தரவு பரிமாற்ற சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மேலும் இக்கம்பில்லா தொழில்நுட்பத்தின் மூலம் கூடிய தூரத்திற்கு விரைவான தரவுப் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம் என தென் கொரியாவை மையமாகக் கொண்ட நிறுவனம் சம்சுங் தெரிவித்துள்ளது.
உலகின் அதிகளவான 4 ஜி வாடிக்கையாளர்களைக் கொண்ட நாடு தென கொரியாவாகும். தற்போது அங்கு 20 மில்லியன் 4 ஜி வாடிக்கையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment