கொலன்னாவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு /மலையகத்தில் அடைமழை, பாட்டியும் பேத்தியும் உயிரிழப்பு / விடத்தல்தீவு, பொலன்நறுவையில் சுழல் காற்றினால் வீடுகள் சேதம்


 

கொலன்னாவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு- 
கொழும்பு, கொலன்னாவை, மெதட்ட கொலன்னாவையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் இருந்த நிலையிலேயே இந்த கல்வீச்சு தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் வர்த்தக நிலையம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மலையகத்தில் அடைமழை, பாட்டியும் பேத்தியும் உயிரிழப்பு-
மலையகத்தின் நுவரெலியா இரத்தினபுரி பதுளை மற்றும் தென்மாகாணத்தில் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று பெய்த இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய அடைமழை காரணமாக இயல்புநிலை முற்றாக பாதிப்படைந்த அதேவேளை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வீதிகள் மற்றும் குடியிருப்புகள் நீரில் மூழ்கின.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் டிக்கோயா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்து 65 வயது மூதாட்டி ஒருவரும் ஏழு வயது பள்ளிச்சிறுமியொருவரும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனதுடன் கமலேஷ்வரி என்பவர் காணாமல் போயுள்ளார்.
விடத்தல்தீவு, பொலன்நறுவையில் சுழல் காற்றினால் வீடுகள் சேதம்-
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல்தீவு கிராமத்தில் இன்றுகாலை வீசிய சுழல் காற்றினால் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இன்றுகாலை கடும் மழை பெய்து கொண்டிருந்த போது காலை 8.45 மணியளவில் விடத்தல் தீவு கிராமத்தில் சுமார் மூன்று நிமிடங்கள் வரை சுழற்காற்று வீசியுள்ளது.
இதன்போது குறித்த கிராமத்தில் உள்ள 10 வீடுகள் சேதமாகியுள்ளன. வீட்டு கூரைகள் சுழற்காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
பல வீடுகளின் ஓடுகள் உற்பட பல பாகங்கள் கற்றினால் உடைந்து நொருங்கியுள்ளது. இப் பிரதேசங்களில் மின்கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.
இதேவேளை பொலன்நறுவை, மெதிரிகிரிய பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.
திருகோணமலை பிரதேசத்திற்குள் புகுந்த மகாசென் மினி சூறாவளி காரணமாக அம்மாவட்டத்தில் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger