6 வயது சிறுமியை கற்பழித்த காமுகன்
நாக்பூர்: திருமண விழாவுக்கு சென்ற 6 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மாராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள கன்ஹான் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவுக்கு 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் வந்தாள்.

அந்த வளாகத்தின் மேல் மாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் ராகேஷ் என்கிற சக்ரதார் ஜெகோஜி பெலே (வயது 27).
விழாவில் அனைவரும் உற்சாகமாக இருந்த சமயத்தில் ராகேஷ் சிறுமிக்கு ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து ஏமாற்றி அந்த வளாகத்தில் இருந்த மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த சிறுமியை அவர் கற்பழித்துள்ளான்.
அந்த சிறுமி படிக்கட்டு அருகே நின்று அழுது கொண்டிருந்த தகவல் கிடைத்து அவளது பெற்றோர் அங்கு வந்து விசாரித்த போது தான் அவள் கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவர்கள் கன்ஹான் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பெலேவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு கலைஞர் மறுப்பு-
கச்சத்தீவைத் தாரைவார்க்க திமுக ஒருபோதும் உடன்படவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவைத் தாரைவார்க்க திமுக ஒருபோதும் உடன்படவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1974 ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் திகதி, கச்சத்தீவு தொடர்பான இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த நாளே தாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கூட்டத்தில் ஒப்பந்தத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதிமுக அப்போதே அதனை எதிர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதே நாளில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து அப்போதைய பிரதமருக்கு முதலமைச்சர் என்ற முறையில் தாம் கடிதம் எழுதியதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கச்சத்தீவு குறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய ஜெயலலிதா, உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறி திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருப்பதாகக் கருணாநிதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய வதிவிடப் பிரதிநிதியாக டலி; கடமை பொறுப்பேற்பு-
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக டேவிட் டலி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான தற்போதைய வதிவிடப் பிரதிநிதியான பேர்னாட் சவேஜ் ஜின் இடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக டேவிட் டலி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான தற்போதைய வதிவிடப் பிரதிநிதியான பேர்னாட் சவேஜ் ஜின் இடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது டேவிட் டலி ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிடப் பிரதிநிதியாக கன்பராவிலிருந்து கொண்டு செயற்பட்டு வருகிறார்.
பதவி விலகிச் செல்லவுள்ள பேர்னாட் சாவேஜ் 2009 ஆம் ஆண்டின் இறுதிப் போர் வேளையில் இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிடப் பிரதிநிதியாக சிரமமானதொரு வேளையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அவரது நான்கு ஆண்டுகள் கால பதவி வேளையிலேயே இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் விமர்சனங்களுக்கு உள்ளாக நேர்ந்ததுடன் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையையும் இழக்க நேரிட்டது.
.jpg)
Post a Comment