வடமாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும்



வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் மாற்றுக்குழுவுடன் இணைந்தே போட்டியிடவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பாலித ரங்கேபண்டார தங்களுக்கு ஆதரவளிப்பார் என்று முன்னாள் இராணுவத்தளபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் ஒரே தடவையில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளதாக அமைச்சர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger