“33 குற்ற செயல்களை காட்டிக்கொடுத்த உள்ளாடை” நபர்




போதைப்பொருள் பக்கற்றுகள் 10 யை உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த போது கைதுசெய்யப்பட்ட ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது 33 குற்றச்செயல்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்பஹா குற்றத்தடுப்பு பிரிவினரே 35 வயதான ஒரு குழந்தையின் தந்தையான குறித்த சந்தேக நபரை வெலிவேரிய பகுதியில் வைத்து நேற்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த சந்தேகநபரை சோதனை செய்தனர். இதன்போது,அவர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த சுமார் 300 கிராம் அடங்கிய போதைப்பொருள் பக்கற்றுகள் 10 யை மீட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி இடுப்பில் மறைத்து வைத்திருந்த திருகாணிகளை கழற்றும் ஆயுதமொன்றை மீட்டுள்ளனர். அவைத்தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே 33 குற்றச்செயல்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியாகியுள்ளன.
அவைத்தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 18 சம்பவங்கள் தொடர்பிலான பொருட்களை மீட்டெடுத்துள்ளனர்.
கம்பஹா, வெலிவேரிய, நிட்டம்புல, மினுவாங்கொடை, வியாங்கொட மற்றும் வீரகுர பகுதிகளிலுள்ள வீடுகளிலேயே குறித்த சந்தேநபர் தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளார்.
குறித்த சந்தேநபர் பொலிஸ் அதிகாரியின் வீட்டிலும் சுமார் 25 பவுண் நகைகளை கொள்ளையடித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger