சொகுசு வீடொன்றினுள் மறைமுகமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை சுற்றவளைத்துள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு வீடொன்றையே சிலாபம் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை சுற்றிவளைத்துள்ளனர்.
தங்களுக்கு கிடைத்த தகவல்களையடுத்தே குற்ற ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வீட்டிலிருந்து 24,120 டிரேம் சோடா, மற்றும் 10 பெரல்கள், இரண்டு கேஸ் சிலிண்டர்களுடன் மேலும் பல உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment