புலிகளுக்கு என் தந்தை ஆயுதம் வழங்கியது என மனம் திறக்கும் சஜித்




தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்?என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித்பிரேமதாஸா தெளிவுப்படுத்தியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைபிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்த சஜித்பிரேமதாஸா எம்.பி இது தொடர்பில் பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலே ஜனாதிபதி பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்தது ஏன்? புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பயன் என்ன? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி பிரேமதாஸா புலிகள் மீது கொண்டிருந்த தப்பான அபிபிரயாத்தின் பெறுபேறாகவே கிழக்கில் பொலிஸ் அதிகாரிகள் கொன்றொழித்தமையை பார்க்கவேண்டும்.
அரசாங்கம் புலி பயங்கரவாதிகள் மீது அதீத நம்பிகைகொண்டிருந்த காலத்திலேயே கிழக்கில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய இராணுவத்தினர் வடகில் நிலைக்கொண்டிருப்பதனை ஜனாதிபதி பிரேமதாஸா எதிர்த்தார். அதனால் தான் இராணுவத்துடன் சண்டையிட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு இரகசியமாக ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை வழங்கினார் என்று மேஜர் ஜெனரல் டென்சில் கொம்பேகடுவ கொலையை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு குறைப்பாடுகள் இருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாகவே புலிகளின் கிழக்கு மாகாண தளபதியை பிரிக்கமுடிந்தது. அது மிகமிக முக்கியமான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘புலிகள் அமைப்பின் தலைவருக்கு எதிராக செயற்படவும் மாத்தையை குழுவை பலப்படுத்துவதற்குமே’ ஜனாதிபதி பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger