பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரிப்பின் கட்டியான பாகிஸ்தான் முஸ்;லிம் கட்சி 272 தொகுதிகளில் 125க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது.
பலத்த பாதுகாப்புக்கும் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குமிடையிலே இத்தேர்தல் பாகிஸ்தானில் இடம்பெற்து.
தனிப்பெரும்பான்மை அமைக்க 314 தொகுதிகளில் 137 தொகுதிகளில் வெற்றிபெறவேண்டும். எனவே நவாஸ் ஷெரிப்பின் கட்சிக்கு இன்னும் சில தொகுதிகள் வெற்றி பெற்றால் தனியாக ஆட்சியமைக்க முடியும்.
இதேவேளை முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெரிக் இ-இன்சாப் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் பிரமர் ஷர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்று 3ஆவது இடத்திலுள்ளது.
இந்நிலையில் நவாஸ் ஷெரிப்பின் கட்சிக்கு தனிப்பெரும்பான்னை கிடைக்காவிடின் இம்ரான் கானின் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நவாஸ் ஷெரிப்பின் வெற்றி தான் ஏற்றுக் கொள்கிறேன். மேலும் அவரைப் பாராட்டுகிறேன் எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தற்போதும் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இறுதி முடிவுகள் இன்று இரவு அல்லது நாளை காலை வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன நிலக்கரி சுரங்க விபத்தில் 27 பேர் பலி-
சீனாவின் சிசுஆன் மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிலக்கரி சுரங்க விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் சிசுஆன் மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிலக்கரி சுரங்க விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறிந்த நிலக்கரி சுரங்கத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விபத்தின் போது பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 86 பேரை மீட்டுள்ளனர். இதில் 16 பேர் காயத்திற்குள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் 24 மணிநேரத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட 2ஆவது விபத்துச் சம்பவம் இதுவாகும். ஏற்கனவே ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம் -நவாஸ் செரீப்-
இந்தியா உடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்: நவாஸ் செரீப்- இந்தியாவுடன் நல்லுறவுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என நவாஸ் செரீப் தெரிவித்தார்.
இந்தியா உடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்: நவாஸ் செரீப்- இந்தியாவுடன் நல்லுறவுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என நவாஸ் செரீப் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது தடவையாக பிரதமர் பதவி ஏற்கும் நவாஸ் செரீப் தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:- பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் வெற்றியை பாகிஸ்தான் மக்களுக்கு சமர்பிக்கிறேன். நம்பிக்கையுடன் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். நான் எனது ஆட்சி காலத்தில் இந்தியாவுடன் ஆன நல்லுறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன்.
மேலும் இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் வலிமைக்கான புதிய அத்தியாயம் படைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, தேர்தல் முடிவைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லீம் லிக் (என்) கட்சி தொண்டர்கள் நேற்று நள்ளிரவு தங்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போது அவர்கள் மத்தியில் நவாஸ் செரீப் பேசினார். நமது கட்சி பாராளுமன்றத்தில் தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும்படி தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால், நவாஸ் செரீப்பின் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 130 இடங்களே கிடைத்துள்ளன.
தனி மெஜாரிட்டிக்கு இன்னும் 7 இடங்கள் தேவைப்படுகிறது. எனவே, சுயேச்சைகள் மற்றும் ஜமீயாத் உலமா- இ-இஸ்லாம் போன்ற சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment