20 விநாடிகளுக்குள் தொலைபேசி பற்றரியை சார்ஜ் செய்யும் கருவி : 18 வயதான யுவதியின் கண்டுபிடிப்பு / புவியை கடந்து செல்லும் மற்றுமொரு விண்கல் ‘QE2′


 

20 விநாடிகளுக்குள் தொலைபேசி பற்றரியை சார்ஜ் செய்யும் கருவி : 18 வயதான யுவதியின் கண்டுபிடிப்பு-செல்லிடத் தொலைபேசி பற்றரிகளை 20 விநாடிகளுக்குள் சார்ஜ் செய்யக்கூடிய கருவியொன்றை 18 வயதான யுவதியொருவர் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் இஷா குராய் எனும் யுவதியே இக்கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இக்கருவிக்கு சுப்பர் கெப்பாசிட்டர் (Super Capacitor) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
செல்லிடத் தொலைபேசி பற்றரியை சார்ஜ் செய்வதற்காக மணித்தியாலக் கணக்காக காத்திருக்கும் நிலையை மாற்றக்கூடிய புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கருவியை கண்டுபிடித்தமைக்காக இன்டெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியின்போது இஷாவுக்கு இன்டெல் இளம் விஞ்ஞானிக்கான விருதும் 50 ஆயிரம் டொலர் பணப் பரிசும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதைக் கண்டுபிடிப்பதற்கு உநது சக்தியாக இருந்தது எதுவென தொலைக்காட்சி செவ்வியொன்றின்போது இஷாவிடம் வினவப்பட்டது. எனது செல்லிடத் தொலைபேசி பற்றரி எப்போதும் சார்ஜ் இறங்கியிருப்பதே எனக்கு இக்கண்டுபிடிப்புக்கான சிந்தனையைத் தூண்டியது என அவர் பதிலளித்தார்.
எதிர்காலத்தில் கார்களுக்கான பற்றரிகளையும் விரைவாக சார்ஜ் செய்வதற்கு தனது கண்டுபிடிப்பு வழிவகுக்கும் என இஷா கருதுகிறார்.
புவியை கடந்து செல்லும் மற்றுமொரு விண்கல் ‘QE2′-‘QE2′ எனப் பெயரிடப்பட்டுள்ள விண் கல் ஒன்று இம்மாத இறுதியில் பவியை கடந்து செல்லவுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல்லானது கேம்பிரிட்ஜிலுள்ள மைனர் கோள் நிலையத்தினாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 1.7 மைல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 31ஆம் திகதி இரவு 959 மணிக்கு பூமியிலிருந்து சுமார் 3.6 மில்லியன் மைல் தொலைவில் புவியை இவ்விண்கல் கடந்து செல்லவுள்ளது. மேலும் இவ்விண்கல்லினால் புவிக்கு ஆபத்துகளும் ஏற்படாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்விண்கல் தொடர்பாக மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு தாம் ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் பிரதம ஆராய்ச்சியாளர் கலாநிதி லேன்ஸ் பென்னர் கூறியுள்ளார்.
இவ்விண்கல் முதன் முதலில் 1998ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7544n
754_slide_slide
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger