சிறையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் உள்ளிட்ட மூவர் கைது / பெண் கைதிகள் 100 பேர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்




 


சிறையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் உள்ளிட்ட மூவர் கைது-
கொழும்பு அவிசாவளை தற்காலிக சிறைக்கூடத்திலிருந்து தப்பிச்சென்ற குற்றவாளிகள் இருவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் பாதுக்க பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை தற்காலிக சிறைக்கூடத்திலிருந்து அண்மையில் தப்பிச்சென்ற 10 சந்தேகநபர்களில் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்களில் ஏனைய 8 சந்தேகநபர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது.
மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திற்குள் நுழைந்து துப்பாக்கிகளைக் காண்பித்து அங்குள்ள வர்த்தக நிலையங்களில் சுமார் 6 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டு இவர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.
பெண் கைதிகள் 100 பேர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்-
கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அமைச்சின் செயலாளர் பு.ளு.விதானகே குறிப்பிட்டார்.
சிறைச்சாலை நிர்வாக வசதிகளைக் கருத்திற் கொண்டே இவர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அமைச்சின் செயலாளர் பு.ளு.விதானகே குறிப்பிட்டார்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலர் வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள், குறித்த பிரிவினை சோதனையிடுவதற்கு அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் அண்மையில் எதிர்ப்பை வெளியிட்டதாக சிறைச்சாலையின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையிலான கைதிகள் குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது போனதாகவும் சிறைச்சாலை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger