தகவல்களை மாற்றி பெண்களை வெளிநாடு அனுப்புவது தொடர்கிறது-
வெளிநாடுகளுக்கு தகவல்களை மாற்றித் தொழிலுக்காக பெண்களை அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு தகவல்களை மாற்றித் தொழிலுக்காக பெண்களை அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
போலியான தகவல்களை வழங்கி வெளிநாடு செல்வதற்கு முயற்சித்த பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பணியகத்தின் பிரதி இணைப்பதிகாரி மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
பணிப்பெண்கள் தவிர்ந்த வேறு தொழில்களுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து பெண்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, போலியாக தகவல்களைத் தயாரிக்கும் முகவர் நிலையங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பணியகம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறு செல்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களைக் காப்பாற்றுவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமமானது எனக் குறிப்பிட்டார்.
எனவே, இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இயன்றவரை தடுக்குமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
தேசிய சரணாலயங்களில் விலங்குகளை வேட்டையாடுவது அதிகரித்துள்ளது-
உடவளவை மற்றும் லுணுகம்வெகெர தேசிய சரணாலயங்களில் விலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடவளவை மற்றும் லுணுகம்வெகெர தேசிய சரணாலயங்களில் விலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வேட்டையாடப்படும் விலங்குகள், உணவகங்களில் விற்கப்படுவதாக சூழலியலாளர் ரவீந்திர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தேசிய சரணாலயங்களுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பதும் அங்குள்ள விலங்குகளை வேட்டையாடுவதும் மிருகவதை சட்டத்தின் பிரகாரம் தண்டணைக்குரிய குற்றமென சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான குற்றங்களை புரிபவர்களுக்கு ஒரு வருடம் முதல் ஐந்து வருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சாவிடம் வினவிய போது, இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான விசேட திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

Post a Comment