அமெரிக்காவைச் சேர்ந்த 79 வயதான பாட்டியொருவர் 13500 அடி உயரத்தில் வைத்து எயார் பிளேனிலிருந்து பரசூட் மூலம் தரையில் குதித்துள்ளார்.
கரோலின் மெய்ஸல்பேர்க் என்ற 79 வயதான பெண்மணியே இவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கார்டினர் எனுமிடத்திலிருந்து குதித்துள்ளார்.
பல வகையான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பாட்டி, அவரது 3 பிசியதெரபி வைத்தியர்களின் ஆலோசனைகளையும் மீறியே இவ் அபாயகரமான செயலை செய்துள்ளார்.
கரோலின் 2 தடவைகள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர். மேலும் நீரிழிவு, ஒஸ்ரியோபொறோஸிஸ் மற்றும் வாதம் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது 79ஆவது வயதில் துணிச்சலாக 13500 அடி உயரத்திலிருந்து குதித்துள்ளார். இதன்போது இவருடன் 60 வயதான பயிற்சியாளர் ஒருவரும் குதித்துள்ளார்.
இவர் அமெரிக்க இராணுவத்தில் 6 வருடங்கள் பணி புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கரோலின் கூறுகையில், குதிக்கும் போது எனது நெஞ்சுப் பகுதியில் மட்டும் சற்று வலி ஏற்பட்டது. மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் எனது 80ஆவது பிறந்த தினத்தில் 10 நண்பர்களுடன் இணைந்து குதிக்க திட்டமிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளை முன்வைக்க தொலைபேசி இலக்கம்-
கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்த நாரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 07 10 10 10 10 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்த நாரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 07 10 10 10 10 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என நாரா நிறுவனத்தின் தலைவர் சயூர சமரசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் இதன்மூலம் கடற்றொழில் துறைசார் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடற்றொழில் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் இந்த துறையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்தும் இதனூடாக அறிந்துகொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த வசதியை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் இதனூடாக பெற்றுக் கொள்ள முடியுமென நாரா நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த நால்வருக்கு விளக்கமறியல்-
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது திருகோணமலையில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது திருகோணமலையில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த நால்வர் திருகோணமலை கிழக்கு கடற்பரப்பில் நேற்று கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment