நிதி திரட்டியதை நிரூபித்தால் அமைப்பை கலைக்கத் தயார் -பொதுபல சேனா-
பொதுபல சேனா அமைப்பானது நோர்வே, அமேரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளிடம் நிதி திரட்டியதாக நிரூபித்தால், இரண்டு மணிநேரத்துக்குள் பொதுபலசேனா அமைப்பை கலைத்து விடுவதாக அதன் செயலாளர் கலபோடஎத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச பொதுபல சேனா அமைப்பு மேற்கத்தைய நாடுகளில் திரட்டியதாக கூறியதாகவும், அதனை அவர் நிருபிக்கும்படி தாம் சவால் விடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும் விமல் வீரவங்ச இந்தியாவின் சிவசேனா அமைப்புடன் தொடர்பில் உள்ளதா? என்ற சந்தேகம் இருப்பதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா குறித்து விமல் வீரவன்சவைப் போல சிலர் கூறிய விடயங்கள் அனைத்தும் பொய் எனவும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கையர் என செயற்பட்டால் வெற்றி கிடைக்கும் -அர்ஜுன ரணதுங்க-
இன ரீதியில் அல்லாது இலங்கையர் என செயற்படுவதன் ஊடாக பல வெற்றிகளை அடைய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கோபேய்கனவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வீரவன்சவை கைது செய்ய வேண்டும்-கே. வேலாயுதம்-
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவையே முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் கே. வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவையே முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் கே. வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவரை தான் முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். ஏனெனில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வீரவன்ச போன்றவர்களினால் தான் பிரிவினைவாதம் பேசப்படுகின்றது.
ஏனெனில் வடமாகாணம் இலங்கையின் ஒரு பகுதி இல்லை என்பதையே அவர் சுட்டிக் காட்டுகினறார். இது இலங்கையின் ஐக்கியத்திற்கு எதிரான கருத்தாகும்.
யுத்தம் முடிந்து விட்டது நாட்டில் தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வழ முடியுமென ஜனாதிபதி கூறுகின்றார்.
இந்நிலையிலேயே அரசாங்கத்தில் பிரிவினைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment