கணவன், பிள்ளைகள் முன்னிலையில் பெண்ணைக் கொண்டு சென்ற முதலை-
பதுளை மாவட்டம் மஹியங்கனை, உல்கிட்டிய ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை நேற்று பிற்பகல் முதலை ஒன்று பிடித்துச் சென்றுள்ளது.
பதுளை மாவட்டம் மஹியங்கனை, உல்கிட்டிய ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை நேற்று பிற்பகல் முதலை ஒன்று பிடித்துச் சென்றுள்ளது.
தனது கணவன் மற்றும் பிள்ளைகள் இருவருடன் குறித்த பெண் குளித்துக் கொண்டிருக்கும் போதே இவ் விபத்திற்கு முகங் கொடுத்துள்ளார்.
முதலை பிடித்துச் சென்றவர் உல்கிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39வயதான பெண்ணாவார்.
முதலையிடமிருந்து பெண்ணை மீட்பதற்கான நடவடிக்கைகளில் தம்முடன் இணைந்து படையினரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரச கருமமொழி கொள்கை தொடர்பில் விசேட செயற்றிட்டம்-
அரச கரும மொழி கொள்கைகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளின் போது நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு அரச கரும மொழிகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரச கரும மொழி கொள்கைகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளின் போது நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு அரச கரும மொழிகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசேட செயற்றிட்டமொன்று எதிர்வரும் 16ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரச மொழி ஆணைக்குழுவின் அனைத்து ஆணையாளர்கள், நிபுணர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் கூறினார். விசேடமாக, கனடாவின் அரச மொழிகள் ஆணையாளர் இந்த செயற்திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஆணைக்குழுவின் செயற்பாடுகளை வலுப்படுத்தல், கொள்கைகளில் காணப்படும் பிரச்சனைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வுகளை வழங்குதல் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக்களும், ஆலோசனைகளும் இதன்போது பரிமாறிக் கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், ஐந்தாண்டுகளுக்கான எதிர்கால திட்டம் தொடர்பிலும் தீர்மானங்கள் எட்டப்படவுள்ளதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஹெரோயினுடன் இருந்த பெண், பொலீசாரால் கைது-
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கொழும்பு, கொட்டாவ, ருக்மலே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கொழும்பு, கொட்டாவ, ருக்மலே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது நேற்று இரவு குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 2 கிராம் 330 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
.jpg)
Post a Comment