வானியல் நிகழ்வுகளில் ஒன்றான சந்திர கிரகணம் வியாழக்கிழமை நிகழவுள்ளது.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வான இந்த கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக நிகழவுள்ளது.
நள்ளிரவு 1. 24 மணி முதல் 1.51 மணி வரை நீடிக்கும் இந்த கிரகணம் சரியாக 1.34 மணிக்கு உச்ச கட்டத்தை எட்டும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது குறுகிய பகுதி சந்திர கிரகணமாக அழைக்கப்படும் இந்த நிகழ்வு ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களின் பெரும்பாலான நாடுகளில் தெரிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment