பிரதியமைச்சர் கருணாவுக்கு பறி போனதா உப தலைவர் பதவி??



சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றில் இலங்கையர் உள்ளடக்கம் / தெற்கின் 20 புராதன இடங்களில் அகழ்வு

Print Friendly
பிரதியமைச்சர் கருணாவுக்கு பறி போனதா உப தலைவர் பதவி??-
ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் பீடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கருணா அம்மான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்ததிலிருந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகின்றார். அதன்போது அவருக்கு ஜனாதிபதி அவர்களினால் கட்சியின் உபதலைவர்கள் இருவரில் ஒருவராக நியமனம் வழங்கி அவரை கட்சியின் உயர் பீட உறுப்பினராக செயற்படுத்தி வந்தார்.
அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்படி கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவியேற்றதன் பின்பு கட்சியின் உள்ளார்ந்த ரீதியாக பல மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
அதில் பிரதான ஒரு அங்கமாக ஸ்ரீலஙகா சுதந்திரக் கட்சியன் உபதலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த விநாயகமூர்த்தி முரளிதரனை அப்பதவியிலிருந்து நீக்கவுள்ளதாகவும் அப்பதவியினை தற்போது பதவி வகிக்கும் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கு வழங்கத் திட்டம் தீட்டியுள்ளதாகவும் மேற்படி கட்சியின் உயர் பீடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றில் இலங்கையர் உள்ளடக்கம்-
தெற்கு கடல் பிராந்தியத்தில் பிரச்சினைக்கு உள்ளான நிலப்பரப்பு தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை விசாரணை செய்வதற்கான சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றில் இலங்கையர் ஒருவரும் உள்ளடக்கப் பட்டுள்ளார்.
கடல் சட்டம் தொடர்பான இந்த சர்வதேச விசாரணைக்குழுவில் ஐவர் பெயரிடப்பட்டுள்ளனர். இதில் இலங்கையரான க்ரிஷ் பின்டே என்ற நீதிபதியும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் அமைக்கப்பட்டுள்ள இந்த நீதிபதிகள் குழுவில் பிலிப்பின்ஸ், போலேண்ட, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து அகிய நாடுகளின் நீதிபதிகளும் உள்ளடங்குகின்றனர்.
தெற்கின் 20 புராதன இடங்களில் அகழ்வு-
தென் மாகாணத்தில் புராதன பெறுமதி வாய்ந்த 20 இடங்களில் இவ்வருட மத்தியில் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் புராதன பெறுமதி வாய்ந்த 800 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் நிர்வாக அதிகாரி காமினி தொடம்வல தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை ரம்பா விகாரையில் அகழ்வு நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
மத்திய கலாசார நிதியத்தால் தென் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் அகழ்வு திட்டம் இதுவாகும் என நிர்வாக அதிகாரி காமினி தொடம்வல மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger