பிறந்து மூன்றே நாளான சிசுவை நரபலி கொடுத்த கொடூரம்


பஸ்- ஆட்டோ நேருக்குநேர் மோதி விபத்து: ஒருவர் பலி / இந்த வருடத்தின் 115 நாட்களில் 197 பேர் கொலை / ரயில் தொழிற் சங்கங்கள் பணிப் பகிஸ்கரிப்பதற்கு தீர்மானம்

Print Friendly
babyborn2பிறந்து மூன்றே நாளான சிசுவை நரபலி கொடுத்த கொடூரம்-
சிலி நாட்டில் உள்ள வல்பரைசோ துறைமுகத்துக்கு அருகில் கொல்லிகுவே என்ற மலை பாங்கான இடமுள்ளது. அங்கு வந்த 4 பேர் கும்பல், பிறந்து 3 நாளே ஆன ஒரு குழந்தையை எடுத்துச் சென்று உயிரோடு எரித்து நரபலி கொடுத்துள்ளனர்.
இக்குழுவின் தலைவன் ரமோன் கஸ்டாவோ. இவன் அந்த குழந்தை மதத்துக்கு எதிரானது என்றும் உலகம் அழியப் போகிறது என்றும் கூறி மற்றவர்களை நம்ப வைத்துள்ளான்.
இதையடுத்து அந்த குழந்தையை உயிரோடு எரிக்கும் கொடூர சடங்கை அவனது குழுவை சேர்ந்தவர்கள் நடத்தி உள்ளனர்.
குழந்தையின் தாயையும் நம்ப வைத்து இந்த கொடூர உயிர் பலியை நடத்தியுள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளியாகி இருக்கிறது. கொலை செய்யப்பட்ட குழந்தையில் தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஸ்- ஆட்டோ நேருக்குநேர் மோதி விபத்து: ஒருவர் பலி-
இரத்தினபுரி, குருவிட்ட பெரடைஸ் சந்தியில் இன்றுகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து எம்பிலிட்டிய சென்ற பஸ் ஒன்றும் தனமன்விலவிலிருந்து அவிசாவளைக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியில் வந்த 3 பேரில் ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவிசாவளையைச் சேர்ந்த 31 வயதான விக்கரமசிங்க என்பவர் உயிரிழந்ததுடன், ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் 115 நாட்களில் 197 பேர் கொலை- 
இந்த வருடத்தின் கடந்த 115 நாட்களில் 197 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்­சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இவற்றில் 185 கொலைகள் சண்டையின் போது ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த 2012ம் வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 265 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், இவற்றில் 219 பேர் சண்டைகளின் போது கொல்லப்பட்டார்கள் என்றும் அவர் அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடத்தின் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது, இந்த வருடத்தின் இன்றைவரை இது 24 வீதம் குறை­வடைந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரயில் தொழிற் சங்கங்கள் பணிப் பகிஸ்கரிப்பதற்கு தீர்மானம்-
இன்னும் ஓரிரு நாட்களில் நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் கொடுப்பனவு ஒன்றை வழங்க அதிகாரிகள் இணக்கம் தெரிவித்த போதும் அது திருப்தி அளிக்கவில்லை என கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஜானக்க பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger