வீரரர்கள் உதைபந்தாடுவது போல் இந்நாட்டில் முஸ்லிம்களும் பந்தாடப்படுகின்ற சூழலில் தான் நாம் இருந்து வருகின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மருதமனை மசூர் மௌலானா சதுக்கத்தில் இடம்பெற்ற மரிகோல்ட் கிண்ண சுற்றுப் போட்டியில் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் ஏ.எம்.ரகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபைமுன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ ஜவாட் உள்ளிட்ட பலர் இதில் கலந்த கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்;
உலமா சபையின் கிழக்கு மாகாண நிருவாகிகளையும் பள்ளிவாசல் தலைவர்களையும் மூன்று விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து எமக்கும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கம் தொடர்பில்லை என அரசாங்கம் கூறியிருக்கின்ற நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
இந்நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக அனுகுவதற்குரிய அறிவியல் போதாமை பேரினவாத்திற்கு இருக்கின்றது.
இதனால் தான் அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாமல் போகின்ற சூழ்நிலை ஏற்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைகள் குறித்து செயற்படுவதில் போதாத நிலையிருக்கிறது என்ற ஆதங்கம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
இது குறித்து எமது நிலைப்பாட்டினை இந்நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்கான முழுமையான கலந்துரையாடல் ஒன்றை மக்கள் முன்னிலையில் விளக்கமளிக்கும் நிகழ்வாக இன்னும் ஓரிரு தினங்களில் மருதமுனையில் ஏற்பாடு செய்யவுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
Post a Comment