|
| ||
அண்மைக்காலமாக சிரிய அரச படையினரின்
விமானத்தாக்குதலில் 4300க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொலைச்
செய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.துருக்கி
எல்லையையொட்டிய சிரியாவின் வடக்கு பகுதி உட்பட எதிர்ப்பாளர்களின் ஆதிக்கம் மிகுந்த
பகுதிகளில் சிரியாவின் இராணுவம் படுகொலைகளையும் அரங்கேற்றி வருவதாக அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. மனித உரிமை
கண்காணிப்பகத்தின் ஒருவர் பிரதிநிதி அசோசியேட் பிரஸ்ஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் குறித்த
செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான அலப்போ, அதன் அண்மை பிரதேசங்கள்,
சிவிலியன்
நடமாட்ட பிரதேசங்களில் அரச படை கடுமையான விமானத்தாக்குதல்களை
நடத்தியுள்ளது. சிரியாவின் இதர பகுதிகளை விட அமைதி நிலவும் எதிர்ப்பாளர்களின்
கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பயங்கரமான சூழலை உருவாக்க சிரியாவின்
இராணுவம் விமானத்தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களைமீறக்கூடியதாகும். குற்றவாளிகளை
போர்க்குற்றத்திற்காக விசாரணைச் செய்யவேண்டும்.
தெற்கு சிரியாவில் 52 பகுதிகளில் சென்று பார்வையிட்ட பிறகு மனித உரிமை கண்காணிப்பகத்தின் உறுப்பினர்கள் அறிக்கையை தயாரித்தனர்.
இப்பகுதிகளில் சிரியா இராணுவம் 59
விமானத்தாக்குதல்களை
சிவிலியன்கள் வாழும் பகுதிகளில் நடத்தியுள்ளது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள
பகுதிகளில் இக்குழுவினர் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
2 மருத்துவமனைகளின் மீதும் இராணுவம் விமானத்தாக்குதலை நடத்தியுள்ளது. இவை அரசு
திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளன.எதிர்ப்பாளர்கள் பகுதியில் உள்ள இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பிறகு சாதாரண மக்கள்
நெருங்கி வாழும் பகுதிகளில் சிரிய இராணுவ விமானங்கள் அதிகமாக தாக்குதல்
நடத்தியுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளாக சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போரில் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை அண்மையில்
அறிக்கை வெளியிட்டிருந்தது
பசர் அல் அசாத்தின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு
எதிராக துவங்கிய மக்கள் போராட்டம் இரத்தக் களரியாக மாறியதை தொடர்ந்து ஐந்து
லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிரியாவில் இருந்து புலன்பெயர்ந்துள்ளனர்.
.
|
சிரிய படையினரின் விமானத்தாக்குதல் காரணமாக 4300 பொதுமக்கள் பலி : மனித உரிமை கண்காணிப்பகம்
Labels:
சர்வதேசம்
Post a Comment