பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று 15 ஆண்டுகளின் பின்னர் இன்று பகல் 12.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
லண்டனின் கெட்விக் விமானநிலையத்திலிருந்து மாலைத்தீவுக்குச் சென்ற குறிந்த விமானம் அங்கிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது 74 பயணிகள், மற்றும் 15 விமானப் பயணிகளும் விமானத்திலிருந்துள்ளனர்.
போயிங் Boeing 777-200 ரக விமானமொன்றே இதன் போது பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நண்பகல் 2.45 மணியளவில் 80 பயணிகளுடன் விமானம் கெட்விக் நோக்கிப் பயணமாகனதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Post a Comment