தனக்கு எதிராக சேறுபூசும் இணையத்தளங்களின் உரிமையாளர்கள் இருக்கும் இடத்தை தான் சரியாக அறிந்து கொண்டால், அவ்வாறான நபர்கள் உலகில் எங்கிருந்தாலும் அங்கு சென்று அவர்களை சந்தித்து மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, தன்னைப்பற்றி குறித்த இணையத்தளம் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். மறைந்திருந்து சேறுபூசாமல், நேருக்கு நேர் மோதலுக்கு வருமாறு தான் இணையத்தள உரிமையாளர்களுக்கு சவால் விடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். எதிர்வரும் 06 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், அதற்கு முன்னர் குறித்த இணையத்தளத்தின் உரிமையாளர் இருக்கும் இடம் தெரிந்தால், அவர் இருக்கும் இடத்தை தேடிச் செல்ல போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
|
எனக்கு எதிராக சேறுபூசும் இணையத்தளங்களின் உரிமையாளர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவேன்: மேர்வின் சில்வா மிரட்டல்!
Labels:
அரசியல் தலைவர்கள்

Post a Comment