வட மாகாணசபை தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி! - தயாமாஸ்டர்



வடக்கு மாகாண சபைத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி போட்டியிடவுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
நடக்கவிருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. இதற்காக இரு கட்சிகள் என்னை வேட்பாளராக நிறுத்துவதற்கு அணுகியிருந்தன. இலங்கையில் உள்ள முக்கிய தேசியக் கட்சியொன்றும் வடக்கில் உள்ள அரசியல் கட்சியொன்றும் இவ்வாறு என்னைக் கேட்டுள்ளன. நான் எந்தக் கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றார். இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த போது அவருடன் இது தொடர்பான சந்திப்பொன்றை நடத்தியதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger