கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புத்தாண்டுக் காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 233 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலை வட்டாரங்களின் படி இது 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 4% அதிகமாகும்.
புதுவருடம் பிறக்கும் போது கொண்டாட்டங்களின் காரணமாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது
Post a Comment