எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாமுர என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற தகராறில் இரண்டு பேர் பலியானதுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பலியான நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கொலையில் நிறைவடைந்துள்ளது. இதேவேளை, சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்தில் இருவரும் கூறிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டே பலியாகியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment