|
|
பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் படுகொலை செய்து பணத்தை கொள்ளையிட்ட
சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட பாகிஸ்தானியருக்கு சவூதி அரேபியா நேற்று மரண
தண்டனை நிறைவேற்றியதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
சவூதியின் வடமேற்கு பகுதியான தபூக் நகரில்
வசித்த பெண்ணை கற்பழித்த பின்னர் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு
பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக பாகிஸ்தானை சேர்ந்த அம்ஜத் அலி கோலி மீது
பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் மீது நீதிமன்றத்தில் நடைபெற்ற
விசாரணையில் குற்றம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து மரண தண்டனை வழங்கி நீதிபதி
தீர்ப்பளித்தார். இதனையடுத்து,
அம்ஜத் அலி
கோலியின் தலையை துண்டித்து நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி உள்துறை
அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஷரீஆ சட்டத்தை பேணும் நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் கற்பழிப்பு, கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற கடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை
வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த(2012) ஆண்டில் மட்டும் இங்கு 76 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 33 பேருக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
|
பாலியல் பலாத்காரத்தின் பின் படுகொலை : பாகிஸ்தானியருக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றம்
Labels:
குற்றங்கள்
Post a Comment