skip to main |
skip to sidebar
இத்தாலி நாட்டு ஜனாதிபதி நபோலிதானோ (வயது 87) பதவிக்காலம் நிறைவடைய இருப்பதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதில் யாருக்கும் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் இடையே புதிய சமரச தீர்வு ஏற்பட்டு நபோலிதானோவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று அவர் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு பெற்றார். ஆனால் இந்த வாக்கெடுப்பில் பிப்பி கிரில்லோ தலைமையிலான 5–ஸ்டார் இயக்கம் கலந்து கொள்ளவில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலை கண்டித்து பாராளுமன்றம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்த கட்சி அறிவித்துள்ளது.
Post a Comment