கணிதப் புலமையாளர் சகுந்தலா தேவி காலமானார்




சகுந்தலா தேவி
சகுந்தலா தேவி
'உலகின் வேகமான மனிதக் கணினி' என்று புகழ்பெற்ற கணிதப் புலமையாளர் சகுந்தலா தேவி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 83.
ஆரம்பத்தில் சுவாச நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் இதய மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தொடர் இலக்கங்களைக் கொண்ட மிகச் சிக்கலான கணக்குகளுக்கு கூட மிகக்குறுகிய நேரத்தில் மனக்கண்ணிலேயே தீர்வுகாண்பதில் வல்லவர் என்று சகுந்தலா தேவி புகழ்பெற்றவர்.
அவர் சிறுவயதில் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆனால் தானாக வந்த அறிவைக் கொண்டே அவர் இந்தக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டுள்ளார்.
பழைய நூற்றாண்டொன்றின் திகதியைக் கூறினால் மறுநொடியிலேயே அதன் நாளை (கிழமையை) சொல்லுமளவுக்கு அவர் திறமைகொண்டவர்.
உலகில் 58 மில்லியன் பேரில் ஒருவர் தான் இவரைப் போல திறமைகொண்டவராக இருப்பார் என்று விற்பன்னர்கள் கருதுகின்றனர்.
இவரது குடும்பத்திலும் எவரும் படித்தவர்கள் இல்லை. அவரது தந்தை ஒரு மாயாஜால வித்தைக் காரர்.
1939-இல் கர்நாடகாவில் பிறந்த சகுந்தலா தேவி, அவரது திறமைக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தவர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger