முன்பு மேடைகளில் திட்டிக் கொண்ட கருணாநிதி, விஜயகாந்த் திடீர் சந்திப்பு!


Print Friendly
ind.karunanidhi-vijayakanthமுன்பு மேடைகளில் திட்டிக் கொண்ட கருணாநிதி, விஜயகாந்த் திடீர் சந்திப்பு!
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திடீரென்று சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக நெருங்கி வருகின்றன என்று கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று காலை சென்றார். அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது தே.மு.தி.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் வந்தார்.
கருணாநிதி வந்திருப்பது தெரிந்ததும், அவரது கார் அருகே சென்ற விஜயகாந்த், அவருக்கு வணக்கம் தெரிவித்தார். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தி இந்தியாவில் உண்ணாவிரதம்-
இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தில் நேற்றைய தினம் உணவுதவிர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெண்கள் பிரிவு இந்த போராட்டத்தை நடத்தியுள்ளது.
இலங்கையில் தனி ஈழம் அமைப்பதற்கான கருத்துக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை வழங்குமாறு கோரிக்கை-
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில் ஒரு தொகுதியினர் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு கோரியுள்ளனர். தமிழகம், அணையூர் முகாமில் உள்ளவர்களே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தாங்கள் தொடர்ந்து 20 வருடங்களாக இந்தியாவில் வசிக்கின்ற நிலையில், தொடர்ந்தும் தங்களை அகதிகளாக பார்க்கப்படுவதை நிறுத்துமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
தாங்கள் இன்னும் அகதிகளாக பார்க்கப்படுவதால், தாங்களும் தங்களின் பிள்ளைகளும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ind.karunanidhi-vijayakanth
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger