இராணுவம் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை என்பதை முழு உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பும் பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கிளிநொச்சியின் ஐந்தாவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் அஜித் பி. விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைமையகமாக இருந்து வந்த கிளிநொச்சியில், இடம்பெயர்ந்த மக்களுக்கென இராணுவம் நாளாந்தம் செய்யும் பணிகள் பற்றிய ஆதாரபூர்வமான விபரங்கள் இதன் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
உலகெங்கிலும் இருக்கும் அரசியல்வாதிகள், அரசாங்கத் தலைவர்கள், கல்விமான்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், நீதிபதிகள் உட்பட முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் தெரியப் படுத்துவதற்காக தினமும் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப் படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறது காவல்துறை-
அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை இலங்கைக் காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். காவல் நிலையங்களில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட கைதிகள் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள மனித உரிமை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை இலங்கைக் காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். காவல் நிலையங்களில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட கைதிகள் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள மனித உரிமை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை மேம்பாடு தொடர்பில் காவல்துறையினருக்கு விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இவ்வாறான எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் மீது சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பில் மனித உரிமை ஆணையகத்தில் அல்லது நீதிமன்றில் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்க வருடாந்த மனித உரிமை அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment