'பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு எதிராக வழக்கு'





கடந்த வாரம் மின் கட்டண உயர்வை அனுமதித்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யபோவதாக தேசிய மின் நுகர்வோர் இயக்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறான தீர்மானத்தை திடீரென அமுல் செய்யமுடியாது. இது நன்கு ஆராயப்பட்டவேண்டிய விடயமாகும். சிறு கைத்தொழிலாளர்கள் இதை தாக்குப்பிடிக் முடியுமா என ஆராயப்படவேண்டும் என்று அந்த இயகத்தின் பேச்சாளர் பந்துல சந்திரசேன கூறினார்.

சுpறிய அளவு கைத்தொழில்களுக்கு மின்கட்டணத்தில் 19 சதவீதமும் நடுத்தர கைத்தொழில்களுக்கு 15 சதவீதமும் பெரிய அளவிலான கைத்தொழில்களுக்கு 9 சதவீதமும் கட்டண அதிகரிப்பு செய்யப்படும்.

இது போன்று இலங்கை மின்சாரசபை 2008 ஆம் ஆண்டு மின் கட்டண அதிகரிப்பொன்றை கொண்டுவருவதற்கு முயன்றபோது உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது நீதிமன்றம் இந்த மின் கட்டண அதிகரிப்பு முறையை நிராகரித்து மாற்றுத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு பணித்தது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger