: சி.ஐ.டியிடம் வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவு





அம்பாறையில் நடைபெற்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் 390 இலட்சம் ரூபாலை மோசடி செய்ததாக கூறப்படும் நிறைவேற்று அதிகாரியை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் (சி.ஐ.டி) வாக்குமூலம் அளிக்குமாறு கோட்டை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தன்னை கைது செய்யக்கூடும் என்றென்னி காந்தி குணவர்தன என்ற பெயரை கொண்ட நிறைவேற்று அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்து பார்த்ததன் பின்னரே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி கோரலுக்கு அப்பால் தேசத்தின் மகுடம் கண்காட்சியின் போது குறிப்பிட்ட தொகையொன்று மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger