பட்டம் வழங்கும் அதிகாரம் உயர்கல்வி அமைச்சிடம்





பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து கல்வி நிறுவனங்களுக்கு பட்டம் வழங்கும் அதிகாரத்தை உயர்கல்வி அமைச்சு எடுத்துக்கொண்டுள்ளது என அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.

பட்டப்படிப்பு பாடநெறிகளை நடத்துவதற்கான தகுதியை ஆராய்ந்ததன் பின் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தனியார் நிறுவனங்களுக்கும் பட்டம் வழங்கும் தகுதியை வழங்கியது.

பட்டப்படிப்பு பாடநெறிகளை நடத்துகின்ற தனியார் நிறுவனங்கள், அரை- அரசாங்க நிறுவனங்கள் ஒன்பது உள்ளன. தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் இவற்றுள் ஒன்றாகும்.

இனிமேல், அரச பல்கலைக்கழக விடயங்களை மட்டுமே பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு கவனமெடுக்குமென உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில்ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.

ஏற்கவே, அரசாங்கம் தனியார் பல்கலைகழகங்களை நிறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கென நேரடி வெளிநாட்டு முதலீட்டை அரசாங்கம் விரும்புகின்றது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger