முழு நீதிமன்ற அறிக்கை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பொது பல சேனா செயலாளர்


முழு நீதிமன்ற அறிக்கை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பொது பல சேனா செயலாளர்

பொது பல சேனாவின் பொதுச் செயலாளரும்தீவிர போக்கு தேரருமான களபோடத்தே ஞானசார மீது வாகனத்தை  மோதிவிட்டு தப்பியோடியது மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக கிறேன்ட்பாஸ் போலிஸ் நிலையத்தில் 2000 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  ஞானசார தேரரினால் மேற்கொள்ளப்பட்ட விபத்தினால் முகமத் ரிபாய் மற்றும் ரவீந்தர குமார் என்பவர்கள் காயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  இவர் 6 ஸ்ரீ 5444 எனும் வாகனத்தை இதன்போது ஓட்டிச்சென்றுள்ளார்.

இவர் மீதான குற்றங்களில் குடித்துவிட்டு வானகம் ஒட்டியது, குறிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமான வேகத்தில் சென்றது, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டிச்சென்றதுவிபத்து குறித்து அறிவிக்கத் தவறியது என்பன பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் தன்மீது சுமத்தப்பட்ட 9 குற்றச்சாட்டுக்களையும்  ஒப்புக்கொண்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட குற்றங்களுக்காக இவர் 20 செப்டம்பர் 2000 யில்  போக்குவரத்து நீதிமன்றத்தால் ரூபா  12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான முழு நீதிமன்ற அறிக்கை இங்கே பதிவேற்றப்படுகின்றது. (படத்தை உருப்பெருக்கிப் பார்வையிட அதன்மீது கிளிக் செய்யவும்)


































Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger