மியன்மாரில்
அரசியல் முன்னேற்றம் திருப்திகரமாக இருப்பதாகவும் 2010 ம்
ஆண்டு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி Thein Sein பதவியேற்றபின்
பல அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளதுடன் ஜனநாயக வழி முறையில் நாட்டை வழி
நடத்தும் இத்தருவாயில் அதற்கான அங்கீகாரமாக ஆயுத விற்பனை தவிர மியன்மார் மீதிருந்த
பொருளாதார தடைகளனைத்தையும் நீக்குவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
இது
குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் William
Hague அரசியல் முன்னேற்றப்பாதையில் செல்லும் அரசுக்கு
ஆதரவளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு சிறுபாண்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு
எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்பாக கவனமெடுக்கப்பட வேண்டும் எனவும்
சுட்டிக்காட்டியிருப்பினும் பெரும்பாலும் அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவளித்த
நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Post a Comment