ஈராக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள்–ராணுவம் மோதலில் 27 பேர் கொல்லப்பட்டனர் 70 பேர் காயம்





ஈராக் நாட்டு பிரதமர் நூரி அல்–மாலிகிக்கு எதிராக ஒரு பிரிவினர் கடந்த சில மாதமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கிர்குக் நகரின் மேற்கே ஹாவிஜாஹ் என்ற இடத்தில் நேற்று அதிகாலை ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை விரட்ட, ராணுவம் சென்றது.
அப்போது 2 தரப்பினர் இடையேயும் பயங்கர மோதல் மூண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் 27 பேர் பலியானார்கள். 70–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ராணுவ தரப்பில் 2 வீரர்கள் செத்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger