சஞ்சிகையொன்றின் ஆசிரியரின் வீட்டை பொலிஸார் சோதனை





ஈதலய மற்றும் கிந்தர என்னும் சஞ்சிகையொன்றின் ஆசிரியரான ஸ்ரீலால் பிரியந்த என்பவரின் வீட்டை பொலிஸார் சோதனையிடப்பட்டுள்ளனர். சஞ்சிகையின் ஆசிரியரை கைது செய்ய முதலில் பொலிஸார் முயற்சித்தாகவும் பின்னர் வீட்டை சோதனையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் வாக்கு மூலமொன்றையும் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பொலிஸ் தலைமையகத்தில் காணாமல் போன ஆவணங்களை தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கங்கொடவில நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய வீடு சோதனையிடப்பட்டுள்ளதுடன், கைது செய்யவும் பொலிஸார் முயற்சித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தில் காணாமல் போன ஆவணங்கள் எதுவும் தம்மிடம் கிடையாது என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். எனினும் சுமார் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

சஞ்சிகையில் வெளியான சில ஆக்கங்கள் தொடர்பில் எவ்வாறு தகவல்கள் கிடைக்கப் பெற்றது என பொலிஸார் விசாரணை நடத்தியதாகவும், தகவல் மூலங்களை வழங்க மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் ஸ்ரீலால், 1999ஆம் ஆண்டு கடத்தப்பட்டு தாக்கப்பட்டு பின்னர் வீதியில் இறக்கிவிடப்பட்டிருந்தார். பின்னர் 2000மாம் ஆண்டில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியிருந்தனர். இந்த ஆண்டு இரண்டு தடவைகள் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger