பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எழும்புக்கூடு எச்சம் மனிதனுடையது




சுமார் 10 வருடங்களுக்கு முன் சிலியின் அதாகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எலும்புக்கூடு எச்சமானது மனிதனுக்குரியது என்பதை  மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/image_article/article-2313828-19741726000005DC-152_634x286.jpg
2003 ஆம் ஆண்டு இந்த விநோத தோற்றமுடைய சிறிய எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அது வேற்றுக்கிரக வாசிகளுக்குரியது அல்லது கருக்கலைப்புக்குள்ளான சிசுவுக்கோ, குரங்கிற்கோ உரியது என கருதப்பட்டது.
http://www.virakesari.lk/image_article/article-2313828-197406A8000005DC-350_634x339.jpg
அதாகமா ஹூமனொயிட் என பெயர் சூட்டப்பட்ட இந்த இந்த எழும்புக் கூட்டு எச்சம் அத என அழைக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்படி எலும்புக்கூட்டின் என்பு மச்சையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையின் பின், அது 6 அல்லது 8 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த மனித சிறுவனுக்குரியது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வானது அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது.

http://www.virakesari.lk/image_article/article-2313828-19750169000005DC-322_634x264.jpg

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger