|
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய பொம்மைகள், பாதுகாப்பில்லாத தன்மையில் இருந்ததால்,திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த நிறுவனத்திலிருந்து, அமெரிக்காவின், இலினாய்ஸ் மாகாணத்திற்கு, 2500 பொம்மைகள் அனுப்பப்பட்டன. டெடிபியர் மாதிரியில் அமைந்த இந்த பொம்மைகளின் விலை ஒவ்வொன்றும், 1600 ரூபாய் மதிப்புடையவை. இந்த பொம்மைகளின், கை மற்றும் சில பகுதிகள் சேதமடைந்திருந்தன. இது குழந்தைகள் விளையாட, லாயக்கில்லாத நிலையில் இருப்பதாக கூறி, அமெரிக்க நுகர்வோர், பொருள் பாதுகாப்பு ஆணையம் இவற்றை திருப்பி அனுப்பி விட்டது.
|
இந்தியப் பொம்மைகளை திருப்பி அனுப்பியது அமெரிக்கா!
Labels:
சர்வதேசம்

Post a Comment