|
தூக்கு தண்டனை விதிப்பதால் நியாயம் கிடைத்து விடப் போவதில்லை. எனவே அதை கைவிடும்படி இந்தியாவிடம் ஜெர்மனி தெரிவித்துள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் மைக்கேல் ஸ்டெயினர் கூறினார்.தூக்கு தண்டனை விதிப்பதை கொள்கை அளவில் ஜெர்மனி ஏற்கவில்லை. இதுதான் எங்கள் நாட்டின் நிலைப்பாடு.இந்த நிலையை வேறு நாடுகளும் பின்பற்றுகின்றன என்பதை இந்தியாவும் அறியும். காலிஸ்தான் விடுதலை இயக்க பயங்கரவாதி தேவேந்தர் பால் சிங் புல்லர் உள்ளிட்ட எந்த தூக்கு தண்டனை கைதிகளுக்கும் இந்தியா அதை நிறைவேற்றக்கூடாது என்பதே எங்களின் நிலை. எனினும் தனிப்பட்ட முறையில் இந்தியாவிடம் இதுபோன்ற கோரிக்கை ஜெர்மனி தரப்பில் வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
|
தூக்குத் தண்டனையால் நியாயம் கிடைத்து விடாது - இந்தியாவுக்கு ஜேர்மனி அறிவுரை!
Labels:
குற்றங்கள்
.jpg)
Post a Comment