இலங்கை முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட துவேச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளை ஹிடோகம பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் ஹிடோகம போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முஸ்லிம் கிராமமான நாச்சியாதீவு நெலுபாவ மற்றும் ரத்மல ஆகியவற்றில் வசிக்கின்ற முஸ்லிம்களுக்கான சித்திரைப் பெருநாள் நிகழ்வொன்று நேற்று காலை 8.30 தொடக்கம் 10.30 வரை நடத்தப்பட்டது
இதில் கவர்க்குலம சத்தாதிஸ்ஸ ஹிமி பேசுகையில்; இந்நாட்டில் சிங்களவர்களை போலவே முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சகல உரிமைகளும் உண்டு.
இந்நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் ஒரு குழுவினர் மட்டுமே இந்த மூவினத்தினரின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தில் நாம் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்படவேண்டும்.என்று குறிப்பிட்டார்
இந்த நிகழ்வில் மூன்று ஜும்மா பள்ளிவாயல்களினதும் தலைவர்கள் மற்றும் பாடசாலை பிரமுகர்கள் முஸ்லிம் சிங்கள் பொது மக்கள் என சுமார் 500 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
Post a Comment