விபத்தில் துடித்த குடும்பத்தினருக்கு உதவ மறுத்ததால் இருவர் பலி! – வீடியோ இணைப்பு
அப்போது அவர்களை கடந்து பல வாகனங்கள் சென்றன. மனைவி மற்றும் மகளின் உடல்கள் அருகே வலியால் துடித்துக் கொண்டிருந்த மகனை கையில் பிடித்தபடி அந்த நபர், தனக்கு உதவி செய்யும்படி கத்திக் கதறினார். ஆனால் அவரது நிலையைக் கண்டு எந்த வாகன ஓட்டிகளும் பரிதாபம் கொள்ளாமல், மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். ஒருகட்டத்தில் சோர்ந்து போன அந்த நபர், தலையில் கைவைத்தபடி சாலையில் அப்படியே உட்கார்ந்து விட்டார்.
இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மீட்கப்பட்டனர்.
கண்கணிப்பு கேமராவின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊழியர்கள், இதனை உடனடியாக கவனித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஒன்றரை மணி நேரம் தாமதமாக கூறியுள்ளனர். உடனடியாக தகவல் தெரிவித்திருந்தால், அந்த நபரின் மனைவியை காப்பாற்றியிருக்க முடியும் என்று தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா சர்மா குற்றம் சாட்டினார்.
Post a Comment