இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளிநாட்டு சிறப்புப் பிரதிநிதி லெஸ்பீ ரெயிலர் தலைமையிலான குழுவினர் நேற்று 24 ஆம் திகதி மாலை வவுனியாவில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டப் பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கு,கிழக்குப் பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்கப் பிரதிநிதிகள் விரிவாகக் கேட்டறிந்துகொண்டனர். குறிப்பாக வன்னியிலுள்ள தமிழ் மக்களின் இன்றைய வாழ்வியல் நிலைமைகள் பற்றி அவர்கள் மிக ஆர்வமாக கேட்டறிந்து கொண்டதாக சந்திப்பில் கலந்து கொண்ட பிரஜைகள் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
யுத்தத்திற்குப் பின்னரான இக்காலப்பகுதியில் வடக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் பிரஜைகள் குழுவினர் விரிவாக எடுத்துக் கூறினர். வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் பாதுகாப்பு, அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் நாளுக்குநாள் அபகரிக்கப்படுவதையும் அரசாங்கத்தின் புதிய காணிக்கொள்கையானது வடக்கு, கிழக்கிலுள்ள இரு சிறுபான்மை இனங்களுக்கிடையில் இனவிரிசலை ஏற்படுத்தும்வகையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் முழுமையாக நடைபெற்று முடியும் முன்னரே அவர்களின் பூர்வீக வாழ்விடங்கள் அரசாங்கத்தினதும் இராணுவத்தினரதும் தேவைகளுக்காக பறிக்கப்பட்டு வருகின்றன. மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அவர்களின் சொந்தக்காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாமையால் இன்றும் தமது தாய் நாட்டில் அகதி வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் மக்கள் இப்போது பாதுகாப்பற்ற சூழலுக்குள் இருப்பதாக உணர்கின்றனர்.
நாட்டின் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் பறிப்புத் தொடர்கிறது. இதனை சர்வதேசம் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ் மக்கள் அத்தீர்வு என்ன என்பது தெரியாமலேயே தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். எனவே சர்வதேசம் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்தது.
இலங்கையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண சர்வதேசம் குறிப்பாக அமெரிக்கா விரைந்து செயற்பட வேண்டும் என பிரஜைகள் குழுக்கள் வலியுறுத்தின.
இலங்கையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண சர்வதேசம் குறிப்பாக அமெரிக்கா விரைந்து செயற்பட வேண்டும் என பிரஜைகள் குழுக்கள் வலியுறுத்தின.
இச்சந்திப்பில் மனித உரிமைகள் ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார், செயலாளரும் சிரேஷ;ர எழுத்தாளருமான சிந்தாத்துரை, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் டாக்டர் சத்தியமுர்த்தி, செயலாளர் சுந்தரம், திட்ட இணைப்பாளர் குமாரகுலசிங்கம், முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் ரவிகரன், பொருளாளர் இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
–வவுனியாவில் இருந்து அதிரடி செய்தியாளர் கரிகாலன்
–வவுனியாவில் இருந்து அதிரடி செய்தியாளர் கரிகாலன்
விடுதலைப் புலிகள் 11பேருக்கு அமெரிக்க குடியுரிமை-
ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் 11 பேர் நேற்றைய தினம் குடியுரிமை பெற்று அமெரிக்கா சென்றுள்ளனர். ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் 11 பேர் நேற்றைய தினம் குடியுரிமை பெற்று அமெரிக்கா சென்றுள்ளனர். ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
குறித்த 11 அகதிகளும் நேற்றைய தினம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க குடியுரிமை பெற்ற குறித்த 11 பேர் உள்ளடங்களாக 44 இலங்கை அகதிகளின் குழு கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழகத்துக்கு அகதிகளாக தப்பி சென்றனர்.
இந்த நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர்.
எனினும் பயணத்தின் இடையில் அவர்களின் படகு பழுதடைந்தநிலையில், ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு சென்ற கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்ட அவர்கள் அரபு ராச்சியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அரபு ராச்சியம் 1951ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அகதிகள் சாசனத்தில் கைச்சாத்திடாத நிலையில், அவர்களுக்கு அங்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்படாதிருந்தது.
எனினும் ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவையின் கோரிக்கை அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் வௌ;வேறு காலப்பகுதியில் அவர்களில் ஏழு பேருக்கு சர்வதேச பாதுகாப்பு அவசியம் இல்லை என்ற நிலையில் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் எட்டு பேர் சுவீடனில் குடியுரிமை பெற்று சென்றுள்ளனர்.
ஏற்கனவே அவர்களில் ஒருவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு சென்ற நிலையில் மேலும் 11 பேருக்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த அகதிகள் குழுவில் மேலும் 19 பேர் தொடர்ந்தும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் உறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment