பெற்றோரை கொலை செய்த காதலர்களும், நண்பர்களும் நீதிமன்றத்தில்.. ஊரே கூடி வேடிக்கை பார்த்தது! (புகைப்படங்கள் இணைப்பு) / புல்மோட்டை இரட்டைக் கொலை விசாரணை: சந்தேகநபர் ஆணா? பெண்ணா?


Print Friendly
batti-005பெற்றோரை கொலை செய்த காதலர்களும், நண்பர்களும் நீதிமன்றத்தில்.. ஊரே கூடி வேடிக்கை பார்த்தது! (புகைப்படங்கள் இணைப்பு)
செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் மே மாதம் 8ஆந் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.
பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்களான ரகு தக்ஷனா அவரது காதலன் சிவனேசராஜா அஜந், இவரின் நண்பர்களான புவனேந்திரன் சுமன், குமாரசிங்கம் நிலக்ஷன் ஆகிய சந்தேகநபர்கள் நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப் பட்டிருந்தனர்.
இவர்கள் மீதான வழக்கினை விசாரணை செய்யத நீதிபதி த.கருணாகரன் எதிர்வரும் மே 8ம் திகதி வரை விளக்கமறியலைத் தொடர்ந்து நீடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்ற காரணத்தினால் சிறைச்சாலையில் தனியான அறையில் தடுத்து வைக்குமாறும் உறவினர்கள் கொண்டு வரும் உணவை அனுமதிக்கக் கூடாது எனவும் சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவினை மாத்திரம் வழங்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மக்கள் மத்தியில் பரபரப்ரபை ஏற்படுத்திய இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை பார்வையிட நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
புல்மோட்டை இரட்டைக் கொலை விசாரணை சந்தேகநபர் ஆணா? பெண்ணா? மருத்துவ அறிக்கைக்கு உத்தரவு
புல்மோட்டை இரட்டைக் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபரான ரூபிகா தமயந்தி ஆணா – பெண்ணா என்பதை ஆராய்ந்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் எஸ். சதீஸ்தரன் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
புல்மோட்டை மஹசன்புர இரட்டைக் கொலை வழக்கு விசாரணை மீண்டும் நேற்று புதன்கிழமை குச்சவெளி சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. புல்மோட்டை பொலிஸாரினால் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து நீதவான் எஸ். சதீஸ்தரன் குற்றவாளிகளான ரூபிகா தமயந்தி மற்றும் இமாலி பிரியதர்சினி ஆகிய இருவரையும் எதிர்வரும் மே 08 திகதி புதன்கிழமை வரைக்கும் 14 நாள் விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
விசாரணையின் போது குற்றவாளியான ரூபிகா தமயந்தி என்பவர் ஆணா? பெண்ணா? என்பதினை அறிந்து கொள்வதற்காகவே திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்களிடம் மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டுமென சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
ரூபிகா தமயந்தி மஹசன்புர பகுதியில் கடந்த காலங்களில் மரம் ஏறுவதினைத் தொழிலாகக் கொண்டு வந்தார். இதனால் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டு இவர் கஞ்சா, குடு, சிகரட், மது ஆகிய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர். இதனால் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இவரை ஆண் என கருதுவதும் உண்டு. இவருடைய செயல்கள் எல்லாம் ஆண்களின் செயல்கள் போல காணப்பட்டது என பிரதேச மக்கள் தெரிவித்தார்.
எதிர்வரும் விசாரணைகள் மேற்கொள்வதற்கு முன்னர் வைத்திய அறிக்கையினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.
பெற்றோரை கொலை செய்த காதலர்களும், நண்பர்களும் நீதிமன்றத்தில்.. ஊரே கூடி வேடிக்கை பார்த்தது! (புகைப்படங்கள் இணைப்பு)….
batti.kolai-11
batti-007
bat
bat-001
bat-002
bat-003
123
batti-008
batti-005
batti-003
batti-004
batti-001
batti-006
batti-002
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger